Future Minds 2018’ கண்காட்சி யாழில் நடத்த திட்டம்

0

கொழும்புநாலந்தா கல்லூரியின் கனிஷ்ட பழைய மாணவர் சங்கத்தினால் (NJOBA) நடத்தப்படடுவரும் ‘Future Minds 2018’ தேசிய உயர்கல்வி மற்றும் தொழில் வழிகாட்டல் கண்காட்சியை வடக்கு கிழக்கு பகுதிகளில் நடத்தவது தொடர்பில் தற்போது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாண்டுக்கான ‘‘Future Minds 2018’ கண்காட்சி 13ஆவது முறையாக எதிர்வரும் ஜுன் மாதம் 15ஆம திகதி நடைபெறவுள்ளது.

இந்த கண்காட்சி கொழும்பு ,கண்டி ,காலி ஆகிய நகரங்களில் இடம்பெறவுள்ளது. இது தொடர்பாக நேற்று கொழும்பு சங்கரில்லா ஹோட்டலில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இந்த கண்காட்சியை யாழ்ப்பாணம் மட்டக்களப்பு பகுதிகளில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்படுமா என்று ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே ஏற்பாட்டாளர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.

கண்காட்சியை முடிந்தளவில் இம்முறை யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கு திட்டமிடுவதாகவும் அவ்வாறு இல்லாத பட்சத்தில் அடுத்தவருடம் நடத்துவதற்கு திட்டமிடவுள்ளதாகவும் தெரிவித்தனர்.
‘எவரையும் கைவிடோம்’ (‘No One Left Behind’) என்ற தொனிப்பொருளின்கீழ் ஜுன் 15 ஆம் திகதி ஆரம்பமாகும் இக்காண்காட்சியானது மூன்றுதினங்களை கொண்டதாக 17ஆம் திகதிவரை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் நடைபெறவுள்ளது.

மேலும் இக்கண்காட்சியானது ஜுன் 22 ஆம் 23ஆம் திகதிகளில் கண்டி KCC யிலும் , செப்டெம்பர் 8 , 9ஆம் திகதிகளில் காலி நகர மண்டபத்திலும் இக்கண்காட்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பிரமாண்டமாக நடைபெறவுள்ள இந்த கண்காட்சியில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்தஉயர்கல்வி நிலையங்கள்,பல்கலைக்கழங்கள் மற்றும் தொழில்தருணர் நிறுவனங்களை உள்ளடக்கியதான 150 இற்கும் மேற்பட்ட காட்சிகூடங்கள் அமைக்கப்படவுள்ளன.

அத்துடன் உயர்கல்வியை மேற்கொள்வதற்கான கடன் திட்டங்களை வழங்கும் முகமாக முன்னணி நிதி நிறுவனங்களை உள்ளடக்கியதான Financial Zone பிரத்தியேகமானநிதி வலயம் ஒன்றையும் உருவாக்குவதற்கு உத்தேசித்துள்ளதாக Future Minds கண்காட்சி ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் லக்மால் பெரேரா தெரிவித்தார்.

மேலும் கடந்த வருடங்களைப் போன்று இம்முறையும் துறைசார் நிபுணர்களின் உளப் பரீட்சை, நேர்முகத் தேர்வுகள் மற்றும் கருத்து பரிமாற்ற கருத்தரங்குகள் போன்றன மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் நலன் கருதி இலவசமாக மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்த Career Counselling துறைசார் ஆலோசனை தேர்வுகள் முதன்முறையாக கண்டி நகரிலுள்ள கண்காட்சிக்கும் இம்முறை விரிவுபடுத்தப்படவுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அவர்களது தகைமைகளை மென்மேலும் வளர்த்துக் கொள்ளவும், தாங்கள் ஆர்வமுள்ள துறைகளிலுள்ளவர்களுடன் வலையமைப்பாகவும் இணைவதற்கு வாய்ப்பளிக்கப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Future Minds 2018 தேசியஉயர்கல்வி மற்றும் தொழில் வழிகாட்டல்கண்காட்சி தொடர்பான மேலதிக விபரங்களுக்கு www.futureminds.lk இணையத்தளத்தை பார்வையிடவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *