ஏலக்காய் தண்ணீர் குடிப்பதினால் உண்டாகும் நன்மைகள்!

0

பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்ட மசாலா பொருட்களில் ஒன்று ஏலக்காய். அதில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியிருக்கின்றன. வாசனைக்காக மட்டுமல்லாமல் உடல் நலத்திற்கும் அதனை நாம் பயன்படுத்தலாம். இதில் புரதம்,மாவுச்சத்து, நார்ச்சத்து,கால்சியம்,உட்பட பல்வேறு முக்கியமான சத்துக்கள் அடங்கியிருக்கின்றன. சித்தமருத்துவத்தில் ஏலக்காய் மிகப்பெரிய பங்காற்றுகிறது. எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்ட நீரைக் குடிப்பதினால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்று தெரிந்து கொள்ளலாம்.

ஏலத்தினைக் கொண்டு நீர் தயாரிக்க முதலில் சிறிதளவு ஐந்து முதல் பத்து வரை நீங்கள் எடுத்துக் கொள்ளும் தண்ணீருக்கு ஏற்ப ஏலக்கய எடுத்துக் கொள்ளுங்கள். அதனை பொடித்து, அந்த தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். அதிகமாக நைஸ் பவுடராக செய்ய வேண்டாம், இதில் வேண்டுமானால் ஒரு கிராம்பு சேர்த்துக் கொள்ளலாம்.

தண்ணீரை நீண்ட நேரம் கொதிக்க வைக்க வேண்டாம். கொதிக்க ஆரம்பித்த சில நொடிகளில் ஆஃப் செய்துவிடுங்கள். இல்லையெனில் ஏலக்காயில் உள்ள துவர்ப்பு சுவை அதிகமாக நீரில் இறங்கிவிடும். பின்னர் அதனை நன்றாக ஆற வைத்து அதனுடன் பாதியளவு தண்ணீரைக் கலந்து குடிக்கலாம். வேண்டுமானால் சுவைக்கு எலுமிச்சை சாறு அல்லது தேன் கலந்து கொள்ளலாம்.

இந்த தண்ணீர் குடிப்பதினால் உணவு விரைவாக செரிமானம் அடையும். வயிறு உப்புசமாக தோன்றுவது, வயிற்று வலி, நெஞ்செரிச்சல்,குமட்டல், ஆகிய வயிறு தொடர்பான பிரச்சனைகளை இது தீர்த்திடும். இந்த நீரை தொடர்ந்து ஒரு வாரத்திற்கு குடித்து வர மலச்சிக்கல் பிரச்சனை இருக்காது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *