ரெஜினாவின் நினைவு நாள் இன்று ,விவசாய பிரதி அமைச்சரினால் நினைவு நாள் ஏற்பாடு

0

ரெஜினாவின் ஆத்ம சாந்தி நினைவு நாள் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. சுழிபுரத்தில் உள்ள  அவரது இல்லத்தில் இறை ஆராதனைகளுடன் அனுஷ்டிப்பு  நிகழ்வு  இடம்பெறுகின்றது.

விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் அவர்களினால் நினைவு நாளுக்கான உதவிகள் ,விவசாய பிரதி அமைச்சரின் வட்டுக்கோட்டை இணைப்பாளர் ரஜிகரனால் வழங்கி வைக்கப்பட்டது.

ரெஜினாவின் சம்பவத்தின் பின்பு நேரடியாக அவரது பெற்றோர்,உறவினர்கள் மற்றும் கிராமமக்கள் ஆகியோரை சந்தித்திருந்ததோடு , விவசாய பிரதி அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் சதாசிவம் இராமநாதன் அவர்களினால் அதன்  போது பிரதேச நிர்வாக அதிகாரிகளுக்கு உரிய கவனம் செலுத்துமாறும் அறிவுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இவை தொடர்பாக விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் அவர்களினால்  மேலதிக நடவடிக்கையாக சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார அவர்களுக்கு கடிதம் மூலம் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் வழக்கை விசாரிக்க பாரப்படுத்துமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.

வட்டுக்கோட்டை இணைப்பாளர் ரஜிகரன் அவர்களினால் காட்டுப்புலம் கிராமத்தின் பிரச்சினைகள் தொடர்பாக அவர்களுக்கான தேவைகள் குறித்தும் கிராம அபிவிருத்தி தலைவருடன்  கலந்துரையாடப்பட்டுள்ளது.

வாழ்வாதார உதவிகளை முன்னேடுப்பதர்க்காகவும்,பிரதேசத்தின் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக குள புரமைப்பு நடவடிக்கைகளில் உள்வாங்குவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் வட்டுக்கோட்டை இணைப்பாளர் ரஜிகரன் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்.

வட்டுக்கோட்டை பிரதேச இளைஞர்கள்  ஆரோக்கியமான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்துடன் இணைந்து பிரதேச சம்மேளனத்தின் ஊடாக நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் வேளை இதனூடாக யாழ் மாநகர சபை உறுப்பினரும் தட்காப்புகலை மற்றும் யோகா  ஆசிரியருமான பாலசிங்கம் சாந்தரூபன்  ஆகியோரும் பிரதேச இளைஞர்களுடன் இணைந்து செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *