வடக்கின் அடையாளம் யாழ், வேல் இன்று வாள்ப்பானம்

0

யாலும் வேலும் அடையாளமாக இருந்த வடக்கின் அடையாளம் இன்று மிகவும் வாளுக்கு கொடுக்கப்பட்டிருப்பது வேதனைக்குரியதாக மாறியிருப்பதாக சமூகவியலாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

முப்பது வருட கட்டமைப்பில் வாழ்ந்த நாம் நிலை குலைவதர்க்கான காரணம் பல்வேறு தளம்பல்களை பொருளியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.தொழில் வாய்ப்பு,பணவருவாய்.இவை இரண்டிற்குமாக திரை கடல் ஓடி திரவியம் தேடிய நாம் சூழல் மற்றும் சமூக காரணிகளால் வெறுப்பை தோற்றுவித்துள்ளதோடு அதன் விளைவுகளை ஏனையோரும் அனுபவிக்க வேண்டிய சந்தர்ப்ப சூழல்

ஆரம்ப காலங்களில் எமது சமூக ,கலாச்சார கட்டமைப்புக்கள் நவீனத்துவம் என்னும் போர்வையில் மருபி வந்ததோடு,இதன் காரணமாக பல பிறழ்வுகளையும் ஏற்படுத்தியிருந்தது.திட்டமிட்டு அளிக்கப்படுவதாக நாம் குற்ற சாட்டுக்களை கூறினோம்.படித்த கல்வியறிவு கொண்டவர்களாகிய நாம் அடுக்கடுக்கான குற்ற சாட்டுக்களோடு அடுத்தவர்கள் மீதும் திணிப்பதர்க்கான சந்தர்ப்ப சூழலும் காரணம் ஆகிற்று.

அனைத்திலும் புலமையாளர்களான நாம் அரசியலில் பழிவாங்கப்படுகின்றோம் எனக்கூறி சர்வதேசத்திடம் நட்ப்பை வளர்க்க வேண்டும் எனக்கூறியவர்கள் இன்று சர்வதேசத்தினால் நிர்க்கதியாக்கப்பட்டிருக்கின்றோம் எனவும் கூறுகின்றோம்.எமது அரசியல் சாதுரியம் அனைத்திலும் தோற்பதற்கான வரலாற்று களநிலைகள் குறித்து கவனம் செலுத்தியிருக்கின்றோமா.அதில் உண்மைத்தன்மை உள்ளதா என இனி வரும் சந்ததிகள் ஊகிக்க கூடும்.

கடல் கடந்தாலும் கண்ணியமானவர்களும் எண்ணக்கூடிய அளவில் இருக்கத்தான் செய்கின்றார்கள்.எமது கட்டமைப்புக்களை கடந்து செல்வதற்கு நாமும் உடன்தைகளாக இருந்துள்ளோம் என்பதை மறுப்பது மறைப்பதும் மனசாட்சியை உண்மையாக உறுத்தும்.

மொழி திட்டமிட்டு  அழிக்கப்படுவதாக கூறுகிறோம்.ஆனால் நாம் பிறமொழிகளை பேசுபவர்களை அறிவாளிகளாகவும்,நாகரீகமாகவும் கருதுகின்றோம்.நமது மொழியை வழங்க அல்லது பற்றாக பேசுபவர்களை பித்தாகவும் கருதி நளினப்படுத்துகிறோம். தென்னிந்திய சினிமா கலாச்சாரம் ஊடுருவி  பங்கப்படுத்துவதாக  காரணம் கற்பிக்கின்றோம்.ஆனால் அடிமையாகவும் இருக்கின்றோம்.

யுத்தம் காரணமாகவும்,பொருளாதார தேவைகளுக்காகவும் வெளிநாடுகளுக்கு சென்ற நாம் அங்கிருக்கும் கலாச்சாரத்தையும்,மொழியையும் ஈர்த்துக்கொள்கின்றோம்.ஆனால் இலங்கையில் இருந்த பிறழ்வான காணத்தினால் பெரும்பான்மை இனத்தவர்களின் மொழியையும்,கலாச்சாரத்தையும் மாற்றான் கண்ணோடு நோக்குகின்றோம்.

பிராந்திய அரசியல் செய்யும் நாம் பூகோள அரசியலுக்குள் உள்ளீர்க்கப்பட்டுள்ளோம்.வெளிநாடுகளில் இருக்கும் நம் சந்ததியினர்  எமது வரலாறுகளை அலசி ஆராய்கின்றனர்.அவர்களது கல்வி முறையும் அவ்வாறு மயப்படுத்தப்பட்டுள்ளது உண்மை .ஆனால் நிர்ச்சயம் ஒரு புரிதல்களுக்கு முனைவார்கள்.

எதற்கும் அடுத்தவர்கள் மீது குறையின் தாக்கத்தை ஏற்படுத்தாமல் நாம் ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.தாக்கங்களின் மறுதாக்கங்களையும் நிகழ்காலத்தில் உணர்கின்றோம் என்பதை மறுதலிக்க முடியாது.

வரலாற்றுக்காக வடுக்களை ஏற்படுத்தாமல் வளங்களை ஏற்படுத்துவோம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *