சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் 16 பேர் அணியை சேர்ந்த நால்வர் பங்கேற்பு

0

அரசாங்கத்தில் இருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 4 பேர் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டதாக தென் மாகாண முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வா தெரிவித்துள்ளார்.

மத்திய செயற்குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் அணியை சேர்ந்த எஸ்.பி.திஸாநாயக்க, டிலான் பெரேரா, தயாசிறி ஜயசேகர மற்றும் திலங்க சுமதிபால ஆகியோர் செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

செயற்குழுவில் இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயற்பாட்டு ரீதியான பங்களிப்பை வழங்கினர். 16 பேர் அணியை சேர்ந்த மேலும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொள்வார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நேற்றிரவு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் மத்திய செயற்குழுக் கூட்டம் நடைபெற்ற நிலையில் கட்சியின் மறுசீரமைப்பு செயற்பாடுகள் குறித்து கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *