கரைச்சியில் கவனத்தை ஈர்த்த சுதந்திர கட்சி உறுப்பினர்கள்

0

கிளிநொச்சி மாவட்ட பொன்னகர் வடக்கு kn7 கிராம சேவையாளர் பிரிவு பிரதேசத்தில் வசிக்கும் குடும்பத்திற்கு விவசாய பிரதி அமைச்சர் கௌரவ அங்கஜன் இராமநாதன் தலைமையிலான   சுதந்திரக்கட்சி பிரதேச சபை உறுப்பினர்களான குமாரசாமி தர்மராசா ,ஐயம்பிள்ளை அசோக்குமார் ஆகியோரினால்  உதவி திட்டங்கள் வழங்கப்படுவதற்கு  பிரதேச சபை உறுப்பினர்களின் முயற்சி  கை கூடியுள்ளது.

கிளிநொச்சி மத்திய கல்லூரியில் உயர்தரம் கல்வி கற்கும் மாணவிக்கு அன்பளிப்பாக துவிச்சக்கரவண்டி வழங்கப்பட்டிருந்தது.

அத்தியவசியமான குடிநீர் தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்கும் புதிதாக குழாய் கிணறு ஒன்றும் அமைத்து வழங்கியுள்ளனர் பாடசாலை கல்வியை கற்று வரும் மாணவர்களின் குடும்பத்தின் தந்தை தாய் ஆகியோர் நோய்வாய்ப்பட்டு அவதியுற்று வரும் நிலையில் உறுப்பினர்களின் இவ்வாறான சேவை நலன் பல்வேறு அமைப்புக்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *