அயந்தாவுடன் ஐக்கியமான கரவெட்டி தவிசாளர்

0

கரவெட்டி தெற்கு மேற்கு பிரதேச சபையின் ஐந்தாவது அமர்வு இன்று காலை நடைபெற்று இருந்தது.

பிரதேச சபை உறுப்பினர்களின் கருத்துக்களுடன் சபை அமர்வு ஆரம்பமாகி நடைபெற்றுகொண்டிருந்தது.கட்சி சார்பிரதிநிதிகளுக்கும் பிரதேச நலன் கருதிய கருத்துக்களும் சபையில் முன்வைக்கப்பட்டிருந்தது.

இதன் போது கரவெட்டி பிரதேச சபை உறுப்பினர் சதாசிவம் இராமநாதன் அவர்கள் பல்வேறு பிரதேச செயற்பாடுகள் கருதிய கருத்துக்களை முன்வைத்திருந்ததோடு தவிசாளரின் தன்னிச்சையான போக்கையும் விமர்சித்திருந்தார்.

சரமாரியான விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாத தவிசாளர் தன்னுடைய எதேச்சதிகாரத்தை பயன்படுத்தி உறுப்பினர் சதாசிவம் இராமநாதனின் உரையை தடுத்திருந்தார்.உயரிய சபைகளில் உறுப்பினர்கள் உரையாற்றும் பொழுது உண்மைத்தன்மையை நிரூபிக்காத பட்சத்திலேயே கருத்துக்கள், சபையின் பதிவுகளில் இருந்து நீக்கப்படுவது குறித்து தீர்மானிக்கப்படும்.சபையின் ஏகோபித்த ஆதரவு தவிசாளருக்கு எதிராக காணப்பட்டிருந்தும், தவிசாளர் தனது அதிகாரத்தை இன்று  துஸ்பிரயோகம் செய்துள்ளார்.

சட்ட புத்தகத்தை கையில் வைத்திருந்தால் போதாது அவற்றை நடைமுறையில் கொள்ளவேண்டும்.

அயந்தாவுக்கு கட்டுப்பட்டே அமர்வை கொண்டு செல்வதாக கூறும் தவிசாளர் உறுப்பினர்களின் கருத்து சுதந்திரத்தை பறிக்க முடியுமா

பலமுறை எல்லைமீறி தனது வார்த்தை பிரயோகங்களை பண்ணும் தவிசாளர் மக்களுக்கான  சேவைகளை முன்னெடுக்க தராதரம் அற்றவராகவே காணப்படுவதாக முன்னால் தவிசாளர் விசனத்தை வெளியிட்டிருந்தமையும் கவனிக்கத்தக்கது.

ஒருகட்டத்தில் உலங்கு வானூர்தியை கொள்வனவு செய்வதற்கு கூட தயார் எனவும் குறிப்பிட்டிருந்தார்.நெல்லியடி சந்தை கட்டிடத்திற்கான வாகன தரிப்பிட பிரைச்சினைகளை தீர்க்க முடியாமல் திணறும் தவிசாளர் உலங்கு வானூர்திக்கான தரிப்பிடத்தை பெறாமல், கொள்வனவு பற்றி சிந்திக்கிறார்.

செயலாளரின் தவிசாளர் உடனான  கபடத்தனத்தை புரிந்துகொண்ட சபை உறுப்பினர்களினால் இன்னொரு செயலாளர் பதவி உயர் நிலை பெற்று வரவேண்டும் என வாழ்த்து  தெரிவித்து தற்போதைய செயலாளரின் மூக்கில் தக்காளி சட்னி வடியுமளவுக்கு சபையினால் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

பல்வேறு முன்மொழிவுகளுக்கு மத்தியிலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டும் சேவைகள் மக்களிடத்தே சென்றடையவில்லை முட்டுக்கட்டையாக காணப்படுவதாகவும் குறிப்பிட்டு முன்பிருந்த நிர்வாகத்தின் மூலம் எவ்வித இடையூறுகளும் இன்றி மக்களுக்கான சேவைகள் சென்றடைந்ததாகவும் ஒப்பிட்டிருந்தார்.அதன் பொழுது தனது பிழைகளை திருத்திக்கொள்ள சட்டத்தில் ஒருமாத கால அவகாசம் பெற்றுக்கொள்ள இடம்  காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.சட்டத்தின் ஓட்டைகளை குறிப்பிட அல்ல, மக்களின் சேவைகளை முன்னெடுக்கவே மக்கள் ஆணை வழங்கியிருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *