மிளகின் மகத்துவமும் மருத்துவமும்…

0

பத்து மிளகிருந்தால் பகைவர் வீட்டிலும் உண்ணலாம் என்று சித்தமருத்துவ பழமொழி ஒன்று உண்டு. அந்த பழமொழி சொல்லவருவது மிளகு உணவின் நச்சுத்தன்மையை (Antidote) போக்கும் குணமுடையது என்பதுதான். திரிகடுகம் எனப்படும் சுக்கு, மிளகு, திப்பிலி கூட்டணியில் உள்ள மிளகு, உணவாகவும், மருந்தாகவும் பயன்படும் நறுமணப் பொருள். இதுகுறித்து தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சித்தா பிரிவு மருத்துவர் செல்வமூர்த்தி கூறியதாவது: ஒவ்வொரு உணவிலும் மிளகு இருப்பது ஹெல்த் இன்ஷியூரன்ஸுக்கு கட்டும் பிரீமியத்தைக் காட்டிலும் பாதுகாப்பு தரும்.

மிளகை அதன் உலர்ந்த பழமாகவே (கருப்பு குறு மிளகு) நாம் பெரும்பாலும் பயன்படுத்தினாலும், சில இடங்களில் தொலி நீக்கிய வெண்மிளகாகவும் பயன்படுத்துவர். வெண் மிளகில் காரம் குறைவு. சத்தும் சற்று குறைவுதான். சூப்பில் போட்டு கொஞ்சம் மணமோடு அலங்கரிக்க உதவுமே தவிர வேறு விசேஷமில்லை. அதனால் கருப்புதான் சிறந்தது. மிளகு சற்று வெப்ப குணமுடையது. சீதளத்தை போக்குவதில் மிளகு முதல் மருந்து. நமக்கு உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் உணவிலும் பழங்களிலும் மிளகைத்தூவி சாப்பிடுவது அந்த உணவால் சளி பிடிக்காமல் இருக்கத்தான்.

வெள்ளரிக்காயில் மிளகைத் தூவி சாப்பிட உடலும் குளிரும். சளியும் பிடிக்காது. வெள்ளரி, வெள்ளைப்பூசணி, சுரைக்காய், தர்ப்பூசணி, பாசிப்பருப்பு போட்டு செய்யப்படும் வெண்பொங்கல் முதலான உணவுவகைகளில் மிளகு சேர்ப்பது அவசியம். சளி, இருமல் இருப்பவர் பால் சாப்பிட்டாக வேண்டிய கட்டாயமிருப்பின், சிறிது மிளகுத் தூள் சேர்த்து சாப்பிடுவது நல்லது. மிளகில் உள்ள வேதிப் பொருட்கள் அனைத்தும் நம்மை நோயிலிருந்து காக்கும் வேலையைச் செய்கிறது மேலும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

மிளகிற்கு வீக்கத்தைக் குறைக்கும் பண்பும் (Antiinflamattory) வாதத்தை அடக்கும் பண்பும் (Anti vatha) பசியைத் தூண்டும் பண்பும் (Appetizer), வெப்பத்தைக் குறைக்கும் பண்பும் (கிஸீtஹ்ஜீஹ்க்ஷீமீtவீநீ), கோழையை அகற்றும் பண்பும் (Expectorant), பூச்சிக்கொல்லியாக செயல்படும் பண்பும் (Antihelmenthetic) உள்ளது.

நரம்புத்தளர்ச்சி, கை கால் நடுக்கம், உதறல், ஞாபக சக்தி குறைபாடு, முதுமையில் உண்டாகும் மதிமயக்கம், இவற்றிக்கு மிளகு சிறந்த மருந்தாகும்.
நல்ல மிளகில் பொட்டாசியம், கால்சியம், ஜிங்க், மாங்கனீசு, இரும்புச்சத்து மற்றும் மெக்னீசியம், வைட்டமின் சி, சத்துக்கள் அதிகம் உள்ளது. நல்ல மிளகில் ஜீவீஜீமீக்ஷீவீஸீமீ என்ற ஆல்கலாய்டு இருப்பதால் பசியைத் தூண்டுகிறது.

வயிற்றில் சுரக்கும் என்ஸைம்களை தூண்டி சுரக்கச் செய்கிறது. மேலும் உமிழ்நீரை சுரக்கச் செய்கிறது. இதனால் ஜீரணத் தன்மை அதிகரிக்கப்படுகிறது.
வாயு தொல்லை இல்லை. சித்த மருத்துவத்தில் தயாரிக்கப்படும் அதிக மாத்திரைகள், மருந்துகள், தைலம் மிளகு ஒரு துணை மருந்தாகவும், விஷமுறிவாகவும் சேர்க்கப்படுகிறது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *