வடமாகாணத்தில் உள்ள ஆசிரியர்களை வெற்றிடங்களிற்கு 1860 படடதாரி ஆசிரியர்கள்

0
வடமாகாணத்தில் உள்ள  ஆசிரியர்களை  வெற்றிடங்களிற்கு  860 படடதாரி ஆசிரியர்களை பெப்ரவரி நடுப்பகுதியில் நியமிப்பதற்கு மாகாண பொதுச்  சேவை ஆணைக்குழு தீர்மானித்து ள்ளது.இவற்றுக்கும் மேலாக  1000 பட்டதாரி ஆசிரியர்களையம் இவ்வருடத்தில் நியமிக்க உள்ளோம் என வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ரவீந்திரன் தெரிவித்தார்.
 வடமகாண கல்வி அமைச்சில் படடதாரி ஆசிரியர்களுக்கான நியமன கடிதங்களை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்
மக்களுடைய வரிப்பணத்திலே சம்பளம் பெறுகின்ற அரசாங்க உத்தியோகத்தர்களாகிய நாங்கள் எங்களுடைய சேவைகளை வினைத்திறனாகவும் தாமதம் இன்றியும் நேர்மை யாகவும் செய்ய வேண்டும். ஆசிரியர்களாகிய  நீங்களும் சத்திய பிரமணத்தில் உள்ள விட யங்களின்படி உங்கள் ஆசிரிய பணியினை செய்ய வேண்டும்
சிங்கள  படடதாரி  ஆசிரியர்களை சென்ற  வருடம் நியமித்த போது பெரும்பாலான சிங்கள ஆசிரியர்கள் விண்ணப்பம் கோரப்பட்ட்து தமக்கு தெரியாது என  எம்மிடம் தெரிவித்தனர். எனவே அவற்றினை நாம் கவனத்தில்  கொண்டு   மாகாண பொதுச்  சேவை ஆணைக்குழு கோரிக்கை ஒன்றை  விடுத்துள்ளோம். அதாவது  இந்த வருடத்தில் சிங்கள  படடதாரிகளின் மேலதிக வெற்றிடங்களை நிரப்புவதற்கு மேலதிக விண்ணப்பங்களை கோரவேண்டும் எனவும் குறிப்பிட்டோம்.
அதேபோல் மேலதிகமாக பல பட்டதாரி` ஆசிரியர்களை  வெற்றிடங்களிற்கு நியமிக்க உள்ளோம். குறிப்பாக  860 படடதாரி ஆசிரியர்களை பெப்ரவரி நடுப்பகுதியில் நியமிப்பதற்கு   மாகாண பொதுச்  சேவை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இவற்றுக்கும் மேலாக  1000 பட்ட தாரி ஆசிரியர்களை இவ்வருடத்தில் நியமிக்க உள்ளோம்.
ஆசிரியர்கள் தங்கள் சேவையினை திறம்பட செய்வதற்கு தங்கள் மனநிலையில் மாற்ற த்தினை கொண்டுவர  வேண்டும். இதன் மூலமே சிறந்த ஒரு கல்வியை பிள்ளைகளுக்கு வழங்க  முடியும். மாணவர்கள் ஆசிரியர்களை நல்ல முறையில் கூறும் விதத்தில் ஆசிரியர்க ளும் நடக்க வேண்டும்.
ஆசிரியர்களின் ஒழுக்க கோவைகள் பண்புகள் என்ன என மற்றும் ஆசிரியராக நீங்கள் எவ்வாறு கடமையாற்ற வேண்டும் என 21 நாள் வதிவிட பயிற்சி மாகாண கல்வி திணை க்களத்தாலே வழங்கப்படும்.ஆகவே உங்களுடைய வீட்டிற்கு பக்கத்திலேயே பாடசாலைகள் வேண்டும் என எதிர்பார்க்க கூடாது. முதல் நியமனத்தில் உங்களுக்கு வழங்கப்பட பாட சாலைகளில் நீங்கள் முழு மனதுடன் கடமையாற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *