தமிழர் படைப்பு மட்டுமல்ல தமிழரே பிரம்மிப்பானவர்கள்..!!

0

உலகின் பல்வேறு இடங்களில் காணப்படும் அதிசயங்களை நாம் பிரமித்து பார்க்கின்றோமே தவிர. அருகில் உள்ளவற்றை ஆராய்வது இல்லை.

தமிழர் படைப்பு மட்டுமல்ல தமிழரே ஒரு ஆச்சரியமான படைப்பு தான் என்பதை வரலாறும் பண்டைய காலத்தில் படைக்கப்பட்டவைகளும் தெளிவு படுத்தும்.

அப்படி தமிழர் கட்டுவித்த பிரமிக்க வைக்கும் படைப்பு ஒன்றே எல்லோரா கைலாசநாதர் கோவில். இது மனிதர்களால் அமைக்கப்பட்டது ஆலயம் இல்லை எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேபோன்று இதனை கோயில் எனச் செல்வதை விடவும், ஓர் மர்ம இருப்பிடம் அல்லது அரண்மனை என்றும் கூட வர்ணிக்க முடியும் என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் மகராஷ்டிர மாநிலத்திலுள்ள எல்லோராவில் அமைந்துள்ள குகைக்கோயில்களில் இதுவும் ஒன்று. மிகப்பெரிய தொரு மலையைக் குடைந்து வித்தியாசமாக இந்தக் கோயில் உருவாக்கப்பட்டுள்ளது.

8 ஆம் நூற்றாண்டில் முதலாம் கிருஷ்ணன் ஆட்சிக் காலத்தில் மொத்தமாக 34 கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன அதில் 16ஆவது கோவிலே இந்த கைலாசநாதர் கோவில்.

எப்படி சாத்தியம் என்று சிந்திக்க வைக்கும் வகையில் ஒரு முழு மலையினை குடைந்து அதனையே கோயிலாக மாற்றியமைத்துள்ளார்கள்.

வழக்கமான சிற்ப வேலைகள் போல முன் புறமாக இல்லாமல் மலை உச்சி தொடங்கி தலையிலிருந்து குடைந்து குடைந்து முழு கோவில் சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளது.

ஒரு மலைக் கல்லில் முழுக்கோயிலையே வடிவமைத்துள்ளார்கள் என்றால் அது ஆச்சரியத்தின் எல்லையே. ஓர் கட்டடத்தை முழுக் கல்லில் செதுக்கியுள்ளான் எம் பண்டையத் தமிழன்.

தொழில் நுட்பமே இல்லாத காலத்தில் இப்படி பாறையில் ஓர் கட்டடத்தையே வார்த்துள்ள தமிழனின் சிற்பத் திறனை எப்படி அமைத்தார்கள் என்பது இன்று வரை கண்டு பிடிக்க முடியவில்லை.

கொஞ்சமும் சாத்தியம் அற்ற பலவற்றை எல்லோராவின் கைலாசநாதர் கோவில் கொண்டிருப்பது தான் நமது புருவத்தை உயர்த்தி நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றது.

இப்போதைய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இந்தக் கோயிலை உருவாக்குவது என்றால் சுமார் 100 வருடங்கள் எடுக்கும் என்பது ஆய்வாளர்களின் கருத்து.

ஆனால் இந்தக்கோயிலை அப்போது அமைத்தவர்கள் எடுத்துக்கொண்ட காலப்பதுதி வெரும் 18 வருடங்கள் மாத்திரமே.

அந்த மொத்த மலையின் பரப்பளவையும் அந்த கோவிலின் பருமனை கழித்து விட்டு மீதி இடத்தை கணக்கிட்ட ஆய்வாளர்கள் அந்த கோவிலை செய்து முடிக்க மொத்தம் 4 லட்சம் டன் பாறையை வெட்டி அப்புற படுத்தி இருப்பதாக கணக்கிட்டு இருக்கிறார்கள்.

ஒரு கணக்கு படி மொத்த தொழிலாளர்களும் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் இடையில் இடைவேளை இன்றி வெட்டி எடுத்தாலும் கணக்கு படி ஒரு நாளைக்கு கிட்ட தட்ட 60 தொடக்கம் 65 டன் பாறைகளை தொடர்ந்து அப்புறப்படுத்தி இருக்க வேண்டும்.

உளியைக் கொண்டு இது எப்படி சாத்தியமானது என்பதற்கு பதில் எவரிடமும் இல்லை. அப்போதைய தொழில் நுட்பத்தில் இது சாத்தியமா?

அது மட்டுமல்ல அப்படி வெட்டி எடுக்கப்பட்ட மொத்தம் 4இ லட்சம் டன் பாறைகள் எங்கே போனது அதனை எவ்விதம் அப்புறப்படுத்தியிருப்பார்கள். கோயிலின் அருகே எங்குமே அந்த கற்கள் கிடைக்க வில்லை அப்படியாயின் மாயமாகிப் போனது எவ்வாறு.

அந்த கோவிலில் அடியில் அமைக்கப்பட்டுள்ள தெரியாத பல மர்ம சுரங்கங்கள் எதற்காக அமைக்கப்பட்டன என்ற சந்தேகம் இன்றும் அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்துகின்றது.

ஏனைய கோயில்களை விடவும் மாறுபட்ட வகையில் வானத்தில் இருந்து பார்த்தால் தெரியும் வகையில் இந்தக்கோயில் அமைக்கப்பட்டது.

குறிப்பாக ஒரு சிற்ப அமைப்பை மேலே இருந்து பார்த்தால் x குறியீடு தெரிவது இதெல்லாம் தற்செயலானதா அல்லது காரணத்தினால் அமைக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு பதில் இல்லை.

மேலும் அந்த கட்டிடத்தை உற்று நோக்கிய சில ஆய்வாளர்கள் அதில் சில அமைப்பை உற்று நோக்கும் போது அதை முதலில் மேலே இருந்து செதுக்கி பின் கீழே உள்ள வற்றை செதுக்கி இருக்க முடியாது.

இதை மொத்தமாக கீழ் இருந்து மேல் நோக்கி செதுக்கி கொண்டு போனால் தான் அது சாத்தியம் என்கிறார்கள். அப்படியானால் சுரங்கத்தில் இருந்து வெளிவந்து அமைத்தார்களா இந்த கோயிலை?

ஆய்வாளர்களை திணறவைக்கும் இந்த கட்டட அமைப்பு கண்டிப்பாக மனித சக்தியால் படைக்கப் பட்டதாக இருக்க முடியாது என்று அடித்து சொல்லுகின்றனர். அப்படியானால் அதனை அமைத்தவர் யார்?

கையாலத்தை போன்று வர்ணிக்கப்பட்டதாக கூறப்படும் இந்தக் கோவில், சிவனின் இருப்பிடமாக தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் ஏன் அமைக்கப்பட்டது? யாரால் அமைக்கப்பட்டது எப்படி அமைக்கப்பட்டது என்பதற்கு இன்று வரை விடையில்லை.

நன்றி _ தமிழ்வின்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *