கள்ள மணல் ஏற்றிச் சென்ற கனரக வாகனத்தின் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு

0

கள்ள மணல் ஏற்றிச் சென்ற கனரக வாகனத்தின் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதையடுத்து, கனரக வாகனம் அருகில் நின்ற பஸ்ஸுடன் மோதியதில் நால்வர் படுகாயம் அடைந்துள்ளனர்.

யாழ். பருத்தித்துறை மந்திகை கிராமக் கோடு பகுதியில்  செவ்வாய்க்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பருத்தித்துறை சக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் கன்டனர் ரக வாகனத்தில் கள்ள மணல் ஏற்றிச் சென்றுள்ளனர். மந்திகை கிராமக்கோடு பகுதியில் வைத்து பொலிஸார் வாகனத்தை மறித்த போது, நிறுத்தாது தப்பிச் செல்ல முற்பட்ட வேளையில், பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

துப்பாக்கி ரவை வாகனத்தின் ரயரிற்குள் பாய்ந்த போது வாகனம் கட்டுப்பாட்டினை மீறி அந்தப்பகுதியில் நின்ற பஸ்ஸுடன் மோதியில் பஸ்ஸில் இருந்த இருவர் உட்பட வீதியில் நின்ற இருவருமாக நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்தவர்கள் மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், கள்ள மணல் ஏற்றிச் சென்ற பருத்தித்துறை சக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *